search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிக்டாக்
    X
    டிக்டாக்

    இந்தியாவை பின்பற்றி டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

    இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக் உள்ளிட்ட சில செயலிகளை தடை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு 25 எம்.பி.க்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 25 எம்.பி.க்கள் அதிபர் டிரம்புக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    அதிநவீன உளவு பார்க்கும் கருவியாக டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை சீனா பயன்படுத்தி வருகிறது. இந்த செயலிகளின் மூலம் அமெரிக்கர்களின் தகவல்கள் எளிதாக திருடப்பட வாய்ப்புள்ளது. 

    இதனைக் கருத்தில் கொண்டு நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 60 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை உதாரணமாகக் கொண்டு அமெரிக்க அரசும் செயல்பட வேண்டும். அமெரிக்க மக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கையை அதிபர் எடுக்க வேண்டும். 

    அமெரிக்கர்களின் தரவு, தனியுரிமை அல்லது பாதுகாப்பைப் பாதுகாக்க டிக்டாக் அல்லது சீனாடன் இணைந்த சமூக ஊடக வலைத்தளங்கள் அல்லது பயன்பாடுகளை அமெரிக்கா நம்பக்கூடாது. நமது நாட்டிற்கு எதிரான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிநவீன உளவு பிரச்சாரத்தை நிறுத்தவும், நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கவும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×