search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்-மார்க் எஸ்பர்
    X
    ராஜ்நாத் சிங்-மார்க் எஸ்பர்

    அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

    அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பர் உடன் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    புதுடெல்லி:

    லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

    இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் படுகாயம்- உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது.

    பின்னர் இரு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பின் பதற்றத்தை தணிக்கும் வகையில் சுமூக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து, கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன வீரர்கள் பின்வாங்கின.

    இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உச்சத்தில் இருந்தபோது லடாக் விவகாரத்தில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பட்டை எடுத்தது. 

    மேலும், தென்சீன கடல் பகுதிக்கு அமெரிக்க இரண்டு அதிநவீன போர் கப்பல்களை அனுப்பி வைத்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளாக கருதப்படுகிறது. 

    இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மார்க் எஸ்பர்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    இரு நாட்டு தலைவர்களும் நடத்திய இந்த ஆலோசனையில் பாதுகாப்புத்துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுதல், இந்தோ-பசுபிக் கடல்பகுதியில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×