search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பானில் உள்ள டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் எச் 2ஏ ராக்கெட்டில் ஹோப் விண்கலம் பொருத்தப்படும் காட்சி.
    X
    ஜப்பானில் உள்ள டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் எச் 2ஏ ராக்கெட்டில் ஹோப் விண்கலம் பொருத்தப்படும் காட்சி.

    ஹோப் விண்கலம் எச் 2ஏ ராக்கெட்டில் பொருத்தப்பட்டது - அமீரக விண்வெளி தகவல்

    அமீரகத்தில் உருவாக்கப்பட்ட ஹோப் விண்கலம் இன்னும் 4 நாட்களில் செவ்வாய் கிரகம் நோக்கி விண்ணில் பயணம் செய்ய உள்ளது. அந்த விண்கலம் வெற்றிகரமாக எச் 2ஏ ராக்கெட்டின் உள்ளே பொருத்தப்பட்டுள்ளது.
    அபுதாபி:

    அமீரகத்தில் உருவாக்கப்பட்ட ஹோப் விண்கலம் பூமியில் இருந்து 49 கோடியே 35 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு செவ்வாய் கிரகம் நோக்கி பயணம் செய்ய உள்ளது. இந்த விண்கலத்தின் இறுதி கட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப சோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

    குறிப்பாக இதில் பொருத்தப்பட்டுள்ள கேமராவுடன் கூடிய 3 சிறப்பு உணரும் பகுதிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இந்த பகுதிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள், வானில் உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள ஆக்சிஜன், ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் அளவு உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    இந்த விண்கலம் ஜப்பான் நாட்டின் டனகஷிமாவில் எச் 2ஏ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. இந்த விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு வருகிற 15-ந் தேதி அமீரக நேரப்படி நள்ளிரவு 12.51 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் 800 கிலோ ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.

    இந்த மாபெரும் விண்வெளி பயணத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ளது. இந்த விண்கலம் ஜப்பானில் உள்ள மிட்ஷுபிஸ்சி கனரக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட எச் 2 ஏ என்ற ராக்கெட்டில் தற்போது வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. ராக்கெட்டில் விண்கலம் பொருத்தப்படும் பகுதி அனைத்தும் வெப்பம் மற்றும் அதிக அழுத்தத்தை தாங்கும் சக்தியுடைய உலோக பொருட்களால் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஹோப் விண்கலம் எந்த வித கோளாறும் இல்லாமல் விண்ணில் செலுத்தப்படும். ஹோப் விண்கலம் எச் 2ஏ ராக்கெட் மூலம் டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து மணிக்கு 34 ஆயிரத்து 82 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் செலுத்தப்படும். இந்த விண்கலம் 7 முதல் 9 மாதங்களில் அதாவது வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடைய உள்ளது. இந்த தகவலை அமீரக விண்வெளி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
    Next Story
    ×