search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோல்வியடைந்த ராக்கெட்
    X
    தோல்வியடைந்த ராக்கெட்

    சீனாவில் 3 ஆண்டுகள் காலதாமதத்திற்கு பின் ஏவப்பட்ட ராக்கெட் தோல்வியில் முடிவு

    சீனாவில் 3 ஆண்டுகள் காலதாமதத்திற்கு பின் இன்று ஏவப்பட்ட ராக்கெட் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தோல்வியில் முடிவடைந்தது.
    பீஜிங்:

    சீனா தனது விண்வெளித்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் குறைவான செலவுடைய திட எரிபொருள் மூலம் அதிக எடையை சுமந்து 
    செல்லக்கூடிய செயல்திறன்கொண்ட குஐசூ-11 என்ற ராக்கெட்டை 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் ராக்கெட் ஏவும் முயற்சி தடைபட்டு வந்தது.

    இந்நிலையில், 3 ஆண்டுகள் கால தாமதத்திற்கு பின்னர் இன்று ராக்கெட்டை விண்ணில் ஏவ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் 6 செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து, சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ராக்கெட் ஏவுதளத்தில் குஐசூ-11 ராக்கெட்டை ஏவும் பணிகள் நடைபெற்றது. ராக்கெட் இன்று 12.30 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.

    ஆனால், ஏவுதளத்தில் இருந்து விண்ணைநோக்கி சிறிது தூரம் சென்ற ராக்கெட் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தோல்வியடைந்துவிட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ராக்கெட் விண்ணில் வைத்து வெடித்து சிதறியதா? அல்லது தரையில் விழுந்து தோல்வியடைந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை.

    Next Story
    ×