search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை அளிக்கும் டாக்டர்
    X
    சிகிச்சை அளிக்கும் டாக்டர்

    அலறும் அமெரிக்கா - 2வது நாளாக 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்தைக் கடந்துள்ளது.
    வாஷிங்டன்:

    கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.56 லட்சத்தைக் கடந்துள்ளது.

    உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.   

    இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை இரண்டாவது நாளாக 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

    நேற்று 61,300-க்கும் அதிகமானோர் பாதிப்புஅடைந்தனர். இன்றும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்டியது.

    கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.35 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14.25 லட்சத்தைக் கடந்துள்ளது .
    Next Story
    ×