search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஸ்போர்ட்
    X
    பாஸ்போர்ட்

    அபுதாபியில் இந்திய பாஸ்போர்ட் சேவைகள் 15-ந்தேதி முதல் தொடக்கம்

    அபுதாபியில் இந்திய பாஸ்போர்ட் சேவைகள் மீண்டும் வருகிற 15- ந் தேதி முதல் தொடங்குகிறது.
    அபுதாபி:

    அபுதாபியில் கொரோனா பாதிப்பு காரணமாக கிருமி நீக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்திய தூதரகத்தின் கீழ் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் இந்திய பாஸ்போர்ட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    தற்போது அபுதாபி அரசு தளர்வுகளை அறிவித்துள்ளதை அடுத்து அனைத்து பாஸ்போர்ட் சேவைகளும் வருகிற 15-ந் தேதி முதல் தொடங்குகிறது என அறிவிக்கப்படுகிறது. இதில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதிகளில் செயல்படும் பி.எல்.எஸ் மையங்கள் என்று அழைக்கப்படும் பாஸ்போர்ட் சேவை மையங்கள்அனைத்தும் வருகிற 15-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும். இந்த மையங்களுக்கு பாஸ்போர்ட் சேவை பெற வருகை புரிவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அனைவரும் முக கவசம், கையுறைகளை அணிந்து வர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த மையத்திற்கு நேரடியாக வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×