search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் - வெடி குண்டு தாக்குதல் என நினைத்த மக்கள்

    ஆப்கானிஸ்தானில் தலைநகரில் நேற்று இரவு நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவான நில நடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் அதிர்ந்தன.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் நேற்று இரவு 8.36 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. காபுல் நகரில் இருந்து 30 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பஹ்மன் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 7.5 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோளில் 4.6 என பதிவான இந்த நில நடுக்கத்தால் காபுல் நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் சற்று அதிர்ந்தன. நில நடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்த போதும் மக்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. 

    ஆப்கானிஸ்தானில் உள்நாடு போர் நடைபெறுவதால் அந்நாடு முழுவதும் தினமும் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் அரங்கேறி வருகிறது. 

    சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்கும்போது சம்பவம் நடைபெறும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிர்வுகள் உணரப்படும். 

    ஆகவே, மக்கள் இந்த நில நடுக்கத்தையும், அருகே ஏதோ குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெறுகிறது என நினைத்துக்கொண்டனர். 

    பின்னர் அதிர்வு தொடர்ந்து நீடித்ததால் இது நில நடுக்கம் என்ற முடிவுக்கு வந்து மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

    ஆனாலும், நிலநடுக்கத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் கட்டிடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




    Next Story
    ×