என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
'நன்றி எனது நண்பரே’ நரேந்திர மோடிக்கு டொனால்டு டிரம்ப் டுவிட்
Byமாலை மலர்4 July 2020 6:23 PM GMT (Updated: 4 July 2020 6:23 PM GMT)
அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்திருந்த நியூஜெர்சி, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா ஜார்ஜியா உள்ளிட்ட 13 குடியேற்ற பகுதிகள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்து 1770-ம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி விடுதலை பெற்றன. இதையடுத்து இந்த மாநிலங்களை உள்ளடக்கி அமெரிக்கா தனி நாடாக உருவெடுத்தது.
இதனால், ஆண்டு தோறும் ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் அமெரிக்காவின் 244-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில்,'அதிபர் டிரம்பிற்கும் அமெரிக்க மக்களுக்கும் 244-வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, இந்த நாளில் சுதந்திரத்தையும் மனிதத்தையும் மதித்து கொண்டாடுகிறோம்’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியின் வாழ்த்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள பதில் செய்தியில், ''நன்றி எனது நண்பரே... இந்தியாவை அமெரிக்கா விரும்புகிறது’’ என பதிவிட்டுள்ளார்.
Next Story
×