search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்
    X
    கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்

    கொரோனா சிகிச்சைக்கான ஜெர்மன் நிறுவனத்தின் தடுப்பூசி விரைவில் தயார்

    ஜெர்மன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விரைவில் தயார் ஆகிறது. அதன் முதலாவது பரிசோதனை முடிவு 2 மாதங்களில் வெளியாகிறது.
    பெர்லின்:

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த ‘க்யூர்வேக்’ என்ற நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனம் ஆகும். டியுபிங்கன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது.

    இந்த தடுப்பூசி உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதை முதலில் பரிசோதித்து பார்ப்பதற்காக, ஜெர்மன் மற்றும் பெல்ஜியத்தில் மொத்தம் 144 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 2 மாதங்களில் அவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும்.

    பீட்டர் கிரம்ஸ்னர் கூறியதாக இந்த தகவலை ஜெர்மன் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பரிசோதனைக்கு பிறகு, அடுத்த ஆண்டு மத்தியில், இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று பீட்டர் கிரம்ஸ்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×