search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - நேபாளம்
    X
    இந்தியா - நேபாளம்

    நேபாள எப்.எம். சேனல்கள் இந்திய எதிர்ப்பு பிரசாரம்

    இந்திய-நேபாள எல்லையை ஒட்டியுள்ள நேபாள எப்.எம். சேனல்கள், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
    டேராடூன்:

    இந்தியாவுக்கு சொந்தமான காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்துக்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்நிலையில், இந்திய-நேபாள எல்லையை ஒட்டியுள்ள நேபாள எப்.எம். சேனல்கள், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.

    இந்த சேனல்கள், நேபாள பாடல்களை ஒலிபரப்பவதுடன், அவற்றுக்கு இடையே நேபாள மாவோயிஸ்ட் தலைவர்களின் இந்தியாவுக்கு எதிரான பேச்சுகளை ஒலிபரப்புவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    மேலும், காலாபானி உள்ளிட்ட பகுதிகளை நேபாளத்துக்கு சொந்தம் என்று அந்த சேனல்கள் கூறிவருகின்றன. ஆனால், தங்களுக்கு அதுபோன்ற தகவல் வரவில்லை என்று பிதோராகார் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×