search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
    X
    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்

    ஐநா பாதுகாப்பு கவுன்சில் தேர்தல் வெற்றி- இந்தியாவின் பெயரை குறிப்பிடுவதை தவிர்த்த சீனா

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக சீனா தெரிவித்தது.
    பீஜிங்:

    இந்தியா, மெக்சிகோ, அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன. ஜெர்மனி, நார்வே, உக்ரைன் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தாலும், சீனா இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்தியாவின் பெயரை  குறிப்பிடவில்லை.

    இந்தியா-சீனா ராணுவ பதற்றங்களின் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் மொத்தம் 192 ஐ.நா. உறுப்பினர்களில் 184 உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் இந்தியா தேர்வானது.

    இதற்கு வாழ்த்து தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் பேசினார். அப்போது அவர் இந்தியாவின் பெயரை குறிப்பிடவில்லை.

    இந்தியாவின் வெற்றி மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் ஆதரவு குறித்து கேட்டபோது, நிரந்தர உறுப்பினர் என்ற முறையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் விரும்புவதாக தெரிவித்தார்.

    ‘ஒரு நிரந்தர உறுப்பினராக, ஐ.நா. சாசனத்தால் வழங்கப்பட்ட பொறுப்பை கூட்டாக நிறைவேற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரமற்ற உறுப்பினர்கள் உள்பட பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா விரும்புகிறது’ என்றும் அவர்  கூறினார்.

    மற்ற நான்கு நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவின்  உறுப்புரிமையை ஆதரித்த போதிலும், ஐ.நா.வின் சக்திவாய்ந்த அமைப்பில் உறுப்பினராவதற்கான இந்தியாவின் முயற்சிகளை சீனா பல ஆண்டுகளாக எதிர்த்து வருகிறது.

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் மேசையில் இந்தியா அமர்வது இது எட்டாவது முறையாகும். முன்னதாக, 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளில் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
    Next Story
    ×