search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சுகாதார அமைப்பு
    X
    உலக சுகாதார அமைப்பு

    கொரோனா தாக்கம் மோசமாகி வருகிறது, சுயதிருப்தி அடைய வேண்டாம்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

    கொரோனா வைரசின் தாக்கம் மோசமாகி வருவதால், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று சுயதிருப்தி அடைந்துவிட வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
    ஜெனீவா:

    உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசஸ் காணொலி மூலம் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    கொரோனா வைரசின் தாக்கம் உலகளவில் மிக மோசமாகி வருகிறது. கொரோனா வைரசின் பாதிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன. கிழக்கு ஆசியா, ஐரோப்பா கொரோனாவின் தாக்குதலுக்கு மோசமாக ஆளாகி இருந்தது என்ற நிலை மாறியிருக்கிது. இப்போது அமெரிக்கா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 நாட்களில் 9 நாட்களில் உலகளவில் நாள் தோறும் ஒருலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1.36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். தெற்காசியா, அமெரிக்காவில் இருந்து மட்டும் 75 சதவீதம் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

    கொரோனா பரிசோதனை

    கொரோனாவிலிருந்து விடுபட்டு வரும் நாடுகளுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது சுயதிருப்தி அடைதல்தான். நாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம் என்ற சுயதிருப்தி என்பது ஆபத்தானது. உலகளவில் பெரும்பாலான மக்கள் சந்தேகத்துக்குரிய வகையில் கொரோனா பாதிப்புடனே அலைகிறார்கள்.  கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த வைரஸைக் கவனித்து வருகிறோம். எந்த நாடும் கவனக்குறைவாக இருப்பதற்கு இது சரியான நேரம் அல்ல.

    ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாடுகளில் மட்டும்தான் ஆயிரத்துக்கும் உள்ளாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகளவில் சில நாடுகளில் கரோனாவிலிருந்து விடுபட்டு இயல்புநிலைக்கு வருவதையும் வரவேற்கிறோம்.,

    கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் 1,000 க்கும் குறைவான வழக்குகள் இருந்தபோதிலும், ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் புதிய புவியியல் பகுதிகள் உட்பட வழக்குகள் அதிகரித்து வருகின்றன

    இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்.
    Next Story
    ×