search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்
    X
    சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்

    கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும்: சிங்கப்பூர் பிரதமர் சொல்கிறார்

    உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க ஓராண்டுக்கு மேல் ஆகும் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டாலும் உலகம் முழுவதும் அனைவருக்கும் கிடைக்க பல மாதங்கள் ஆகும் என்று கருதப்படுகிறது.

    இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக அனைவருக்கும் கிடைக்க குறைந்தது ஓராண்டு ஆகும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் லிசியென்லூங் பேசியதாவது:-

    கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் முழுவதும் அனைவருக்கும் பரவலாக கிடைக்க குறைந்தது ஒரு ஆண்டாகும். அநேகமாக ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகலாம்.

    நாம் கொரோனா வைரசுடன் நீண்ட நாட்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அது காசநோய் போன்ற ஆபத்தான தொற்று நோயுடன் கடந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருவதுபோல் கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

    சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்கும், புதிய தொற்றுகள் உருவாகாமல் தடுப்பதற்கும் சோதனைகள் முடுக்கிவிடப்படும்.  நாம் முற்றிலும் கணிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.

    கொரோனா பரிசோதனை

    கொரோனா தொற்று மனித இனம் நீண்ட காலத்துக்கு பிறகு சந்தித்து இருக்கும் மிகப்பெரிய ஆபத்தான நெருக்கடியாகும்.

    கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து சிங்கப்பூர் இன்னும் வலிமையான மேம்பட்ட நாடாக மீண்டும் வரும். கிருமி தொற்றுக்கு முன் இருந்த உலகளாவிய பொருளாதாரத்துக்கு சிங்கப்பூர் விரைவில் திரும்ப போவதில்லை. இதனால் சில தொழில்துறைகள் நிரந்தரமாக மாற்றப்படும். பல தொழில்துறைகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×