என் மலர்

  செய்திகள்

  சீன விமானங்களை இயக்க அமெரிக்கா தடை
  X
  சீன விமானங்களை இயக்க அமெரிக்கா தடை

  விமானங்களுக்கு தடைவிதித்த அமெரிக்காவின் முடிவு வருத்தம் அளிக்கிறது: சீனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்கா சீனா விமானங்களுக்கு தடைவிதித்திருக்கும் முடிவு வருத்தம் அளிப்பதாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இயங்கக்கூடிய 3 விமான நிறுவனங்களும் தங்களது இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. மார்ச் மாதத்தில் சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளிநாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கான கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி, வாரத்துக்கு ஒரு வெளிநாட்டு விமானம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற முடிவை எடுத்தது.

  இதற்கிடையே, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்க சீனாவிடம் அனுமதி கோரின. ஆனால் அதை சீனா கண்டுகொள்ளவில்லை.

  இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, ஜூன் 16-ம் தேதி முதல் சீன நாட்டு விமானங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதில்லை. அதேபோல், இங்கிருந்து சீனா செல்வதற்கும் அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக அறிவித்துள்ளது

  இந்நிலையில் சீன விமானங்களை சஸ்பெண்ட் செய்யும் அமெரிக்காவின் முடிவு வருத்தம் அளிக்கிறது என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத்துறைக்கான செய்தி தொடர்பாளர் ஜயோ லிஜியன் கூறுகையில் ‘‘அமெரிக்காவின் நடவடிக்கை எங்களுக்கு வருத்தும் அளிக்கிறது. எனக்குத் தெரிந்தவரை, சீனாவின் விமான போக்குவரத்துத் துறை நிர்வாகிகள் அமெரிக்க தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

  போக்குவரத்தை தொடர்வதற்காக விமான போக்குவரத்துத் துறை அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறது. சீனா கொள்கைகளை மாற்றிக் கொள்வதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இருதரப்பு முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்காது என நம்புகிறோம்’’ என்றார்.
  Next Story
  ×