search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா, சீனா கொடி
    X
    இந்தியா, சீனா கொடி

    இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் நாட்டின் தலையீடு தேவையில்லை: சீனா

    எல்லை பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளுக்கும் தனி வழிமுறைகளும், தகவல் தொடர்புகளும் உள்ளன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது. எனவே, மூன்றாம் நாட்டின் தலையீடு தேவையில்லை சீனா திட்டவட்டமாக கூறியுள்ளது.
    பீஜிங் :

    இந்திய-சீன எல்லை பிரச்சினையில் சமரசம் செய்து வைக்கத் தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். ஆனால், அவரது விருப்பதை இந்தியாவும், சீனாவும் நிராகரித்தன.

    நேற்று முன்தினம் பிரதமர் மோடியும், டிரம்பும் தொலைபேசியில் எல்லை பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், மோடி-டிரம்ப் உரையாடல் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியனிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு ஜாவோ லிஜியன் கூறியதாவது:-

    இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு உறுதியானது, தெளிவானது. இருநாட்டு தலைவர்கள் இடையே ஏற்பட்ட கருத்தொற்றுமையை இரு நாடுகளும் அமல்படுத்தி வருகின்றன.

    தற்போது எல்லையில் நிலைமை சீராகவும், கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கிறது.

    எல்லை பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளுக்கும் தனி வழிமுறைகளும், தகவல் தொடர்புகளும் உள்ளன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது. எனவே, மூன்றாம் நாட்டின் தலையீடு தேவையில்லை.

    தேசிய இறையாண்மையை உறுதி செய்வதுடன், எல்லையில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் கட்டிக்காக்க உறுதி பூண்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×