search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்தி போலி
    X
    திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்தி போலி

    சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி - இது போலி செய்தி

    எகிப்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து நோயாளி ஒருவர் கரம்பிடித்துள்ளார் என்ற செய்தி போலி எனத் தெரியவந்துள்ளது.
    மருத்துவமனை உடைகளை அணிந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் கொரோனா நோயாளி ஒருவர் பெண் மருத்துவரை காதலித்து, அதே மருத்துவமனையில் இருவரின் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

    வைரலாகும் புகைப்படங்களில் ஒருவர் பெண்ணின் கை விரலில் மோதிரம் அணிவிப்பதும், மற்ற புகைப்படங்கள் இருவரும் ஒருவொரை ஒருவர் பார்த்து கொள்வது போன்று எடுக்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை ஆய்வு செய்ததில் அவை திருமணத்துக்கு முன் மணமக்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என தெரியவந்துள்ளது. இந்த ஜோடிக்கு 2018-ம் ஆண்டிலேயே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. மேலும் புகைப்படங்களில் இருக்கும் இருவருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.

    அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள விவரங்களின்படி புகைப்படங்களில் இருக்கும் ஜோடியின் காதல் கொரோனா வார்டில் மலர்ந்தது இல்லை என்பதும், இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. இதனால் இது போலி செய்தி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×