search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடு
    X
    சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடு

    ஜெர்மனியில் ஜூன் 29-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

    கொரோனா பரவல் தொடர்பாக பொதுமக்களின் சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகளை ஜெர்மனி மந்திரிசபை வருகிற ஜூன் 29-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
    பெர்லின்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது பொதுமக்களின் சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடுகளை ஜெர்மனி மந்திரிசபை வருகிற ஜூன் 29-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் சமூக தொடர்புகளை குறைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பிட்டவர்களுடன் மட்டும் தொடர்பில் இருக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    சமூக தொடர்புகளுக்கான கட்டுப்பாடு


    உலக சுகாதார நிறுவனம் கடந்த மார்ச் 11-ந் தேதி கொரோனா தொற்று குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அன்றிலிருந்து இதுவரை உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3½ லட்சத்தையும் தாண்டி உள்ளது. உலகம் முழுவதும் 54 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 22 லட்சத்து 71 ஆயிரம் பேர் கொரோனா தாக்குதலில் இருந்து குணம் அடைந்து உள்ளனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
    Next Story
    ×