search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி
    X
    நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி

    நேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு

    இந்திய பகுதிகளை இணைத்து வெளியிட்ட நேபாள புதிய வரைபடத்துக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
    காட்மாண்டு:

    இந்தியாவுடன் நேபாள நாடும் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது.

    இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்தியாசுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்கு சொந்த பகுதி என்று கூறி நோபளம் புதிய வரைபடத்தை வெளியிட்டது.

    அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்து வருகிறார். இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்தியாசுரா, லிபுலேக் ஆகிய பகுதிகளை நேபாள நாட்டுக்குள் கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து வரைபடத்துக்கான அனுமதி மற்றும் அது தொடர்பான சட்டத்திருத்தம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் வாக்கெடுப்பு நடக்கும் முன்பே பாராளுமன்றத்தில் இருந்து பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார்கள். எம்.பி.க்களில் மூன்றில் 2 பங்கு எம்.பி.க்கள் அவைக்குள் வரவில்லை.

    இதனால் வரைப்பட சட்ட திருத்தம் மீது விவாதம் நடைபெறவில்லை. இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தாலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    இந்தியாவுடன் மோதல் போக்கை முன்னெடுத்து சென்ற நேபாள பிரதமருக்கு உள்நாட்டிலே எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
    Next Story
    ×