search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் போலீசார்
    X
    போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் போலீசார்

    சீனாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு- ஹாங்காங்கில் வன்முறை மோதல்கள் அதிகரிக்கும் அபாயம்

    சீனாவில் கொண்டு வர உள்ள புதிய பாதுகாப்பு சட்டத்திற்கு ஹாங்காங் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    ஹாங்காங்:

    சீன அரசு புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர உள்ளது. இதுதொடர்பான வரைவு சட்ட மசோதாவிற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய சட்டமானது, சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியான ஹாங்காங்கின் சுதந்திரத்தை பாதிப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டம் வன்முறை மோதலாக வெடிக்கத் தொடங்கி உள்ளது. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்படுகிறது.

    போராட்டம் நடத்தும் மக்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடிக்கின்றனர். போலீசார் மீது போராட்டக்காரர்கள் கையில்  கிடைத்த பொருட்களை எடுத்து வீசுகின்றனர். இப்போராட்டம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ஹாங்காங் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    பிரிவனைவாதம், பயங்கரவாதம் மற்றும் வெளிநாடுகளின் தலையீட்டை தடுப்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என சீன அரசு கூறுகிறது. ஆனால் இந்த சட்டத்தை கொண்டு வருவது, வன்முறை மோதல்களை  அதிகரிப்பதுடன், அமெரிக்காவிடமிருந்து பதிலடியையும் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×