search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ராக்சிகுளோரோகுயின்
    X
    ஹைட்ராக்சிகுளோரோகுயின்

    கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மலேரியா தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம்

    கொரோனா சிகிச்சைக்கு “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரையை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    ஜெனீவா:

    கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சையில் மலேரியா தடுப்பு மருந்தான “ஹைட்ராக்சி குளோரோ குயின்” மாத்திரை நல்ல பலனை அளித்ததாக தகவல் வெளியானது.

    இதே கருத்தை அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தெரிவித்தார். மலேரியா தடுப்பு மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

    இதையடுத்து இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரையை இறக்குமதி செய்தது. உலக அளவில் அந்த மாத்திரை தேவை அதிகரித்தது.

    கொரோனா வைரஸ் பரிசோதனை


    இதற்கிடையே மலேரியா தடுப்பு மாத்திரை கொரோனா சிகிச்சையில் பலன் அளிக்கவில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் சில ஆய்வுகளிலும் மலேரியா தடுப்பு மாத்திரை பலன் அளிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

    இந்த நிலையில் லான் கேட் மருத்துவ ஆய்வுகள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கொரோனா சிகிச்சையில் “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரை பாதுகாப்பானது அல்ல என்றும் இதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் வெண்டிலேட்டரை பயன்படுத்த வேண்டிய தேவையை குறைக்கவில்லை என்றும் இதன் மூலம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறி உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரையை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்துவது பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் தேட்ராக்ஸ் கூறும் போது, “பல நாடுகளில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் மருத்துவ பாதுகாப்பு கருதி மலேரியா தடுப்பு மாத்திரை பயன்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சையில் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரிய வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் தான் “ஹைட்ராக்சிகுளோரோ குயின்” மாத்திரை உட்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதன்பின் 2 நாட்களுக்கு முன்பு அந்த மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×