search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமரின் ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ்
    X
    பிரதமரின் ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ்

    இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா?

    இங்கிலாந்தில் ஊரடங்கு விதியை மீறி தனது பெற்றோர் இல்லத்துக்கு சென்றது தொடர்பாக பிரதமரின் ஆலோசகர் டொமினிக் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த உதவியாளரும், அவரது தலைமை உத்தி ஆலோசகராகவும் இருப்பவர் டொமினிக் கம்மிங்ஸ். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட அவர், கொரோனா பரவலை தடுக்க அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் மீறி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்


    அவர் வீட்டை விட்டு வெளியேறி 250 மைல் தொலைவில் உள்ள தனது பெற்றோர் இல்லத்துக்கு சென்று வந்துள்ளார் என கூறப்படுகிறது. இது அங்குள்ள பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது.

    இதையடுத்து ஊரடங்கு விதிமீறிய அவர் பதவி விலக வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் அழுத்தம் தந்து வருகின்றனர். இதனால் அவர் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி அவரை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியபோது அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். 
    Next Story
    ×