search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவில் இருந்து 21 லட்சத்து 71 ஆயிரம் பேர் மீட்பு

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 21 லட்சத்து 71 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
    ஜெனீவா:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளனர். 

    தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்து 71 ஆயிரத்தை கடந்துள்ளது. 

    தற்போதைய நிலவரப்படி, 53 லட்சத்து 23 ஆயிரத்து 639 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 லட்சத்து 11 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 589 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களில் இதுவரை 21 லட்சத்து 71 ஆயிரத்து 626 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

    அமெரிக்கா - 4,03,228
    ரஷியா - 1,07,936
    பிரேசில் - 1,35,430
    ஸ்பெயின் - 1,96,958
    இத்தாலி - 1,36,720
    பிரான்ஸ் - 64,209
    ஜெர்மனி - 1,59,900
    துருக்கி - 1,16,111
    ஈரான் - 1,02,276
    இந்தியா - 51,783
    பெரு - 44, 848
    சீனா - 78,258
    கனடா - 42,594
    மெக்சிகோ - 42,725

    Next Story
    ×