search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப்
    X
    அமெரிக்க அதிபர் டிரம்ப்

    கொரோனா வராமல் இருக்க ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடும் டிரம்ப்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு வருவதாகவும், அந்த மருந்து மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
    வாஷிங்டன்:

    கொரோனா சிகிச்சைக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை நல்ல பலன் அளித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அமெரிக்காவில் இந்த மாத்திரைகளை பயன்படுத்தும்படி அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அதேசமயம் இது கொரோனா நோயினைத் தடுக்கும் என இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. 

    எனவே, இந்த மருந்தை நோயாளிகளுக்கு வழங்கக் கூடாது என சில மருத்துவ நிபுணர்கள் கூறினர். ஓரளவு பலன் கிடைப்பதாக சில நிபுணர்கள் கூறினர். இதனால் இந்த மருந்து சர்ச்சைக்குள்ளானது.

    ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்தது. எனினும், அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டு வருவதாகவும், அந்த மருந்து மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார். 

    ஹைட்ராக்சிகுளோரோகுயின் நோயை தடுக்கும் வகையில் பயனுள்ளதா?  என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘இந்த மருந்து குறித்து ஏராளமான நேர்மறையான தகவல்கள் எனக்கு வருகின்றன. அது பயனுள்ள மருந்து இல்லை என தெரியவந்தால், நானே உங்களுக்கு சொல்வேன்’ என்றார்.

    ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொரோனா வைரசை தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் தடுப்பு நிறுவனத்தின் தலைவர் அந்தோணி பாசி ஏற்கெனவே கூறியிருந்தார். கொரோனா உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அஜித்ரோமைசின் பயன் தரக்கூடும் என சான்றுகள் இருந்தாலும், இதனை தீர்மானிக்க பெரிய அளவில் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
    Next Story
    ×