search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சுகாதார அமைப்பு
    X
    உலக சுகாதார அமைப்பு

    கொரோனா வைரஸ் பரவ யார் காரணம்?- விசாரணை நடத்த அழுத்தம் கொடுக்கும் 62 நாடுகள்

    கொரோனா வைரஸ் பரவ காரணம் யார்? என்பது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் தீர்மானம் கொண்டு வருகின்றன.
    ஜெனிவா:

    உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கியது. வுகானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து இந்த வைரஸ் கசிந்ததாகம், உடல் உணவு சந்தையில் இருந்து பரவத் தொடங்கியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதற்கு சீனாதான் பொறுப்பு என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டிவருகின்றன. வைரஸ் எப்படி உருவானது என்று கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் உருவானது தொடர்பாக பாகுபாடின்றி, சுதந்திரமாக , விரிவான விசாரணை நடத்தக் கோரி 62 நாடுகள் கோரிக்கை வைக்க உள்ளன. இன்று கூட உள்ள உலக சுகாதார அமைப்பின் 73-வது கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக சுதந்திரமான விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

    ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து கொண்டு வர உள்ள இந்த தீர்மானத்திற்கு இந்தியா, ஜப்பான், பிரிட்டன், நியூசிலாந்து, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த தீர்மானம் விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    Next Story
    ×