search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப்
    X
    டொனால்டு டிரம்ப்

    தடுப்பு மருந்து தயாரிப்பு தகவல்கள் திருட்டா? சீனாவை உன்னிப்பாக கவனிக்கிறோம் - டிரம்ப்

    அமெரிக்கா மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு தகவல்களை சீனா திருடலாம் என தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

    இந்த ஆராய்ச்சி தகவல்களை திருட பல நாடுகளை சேர்ந்த ஹேக்கரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். 

    இதற்கிடையில், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க நிறுவனங்களின் அறிவுசார் சொத்துக்கள், கொரோனா சிகிச்சை, தடுப்பூசி தயாரிப்பு பணிகளை சீனாவில் இருந்து செயல்படும் ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகிறது. 

    ஆனால், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து கொரோனா ஆராய்ச்சி விவரங்களை சீனா திருட முயற்சிப்பதாக டிரம்ப் நிர்வாகம் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை சுமத்தலாம் என அமெரிக்க ஊரகங்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

    கோப்பு படம்

    இந்நிலையில், அதிபர் டிரம்ப் இன்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது அவரிடம் அமெரிக்கா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. 

    அதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், இந்த விவகாரத்தில் சீனாவை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். 

    கொரோனா வைரஸ் விவகாரத்தில் உண்மை தகவல்களை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×