என் மலர்

  செய்திகள்

  கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்கள் (கோப்பு படம்)
  X
  கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்கள் (கோப்பு படம்)

  ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 400 பேர்... 61 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - அதிர்ச்சியில் அமெரிக்கா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 390 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்தது.
  நியூயார்க்:

  உலகம் முழுவதும் 32 லட்சத்து 18 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 90 ஆயிரத்து 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 817 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

  கொரோனா பரவியவர்களில் 10 லட்சத்து 33 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 2 லட்சத்து 28 ஆயிரத்து 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

  சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் புரட்டி எடுத்து வருகிறது. 

  உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகமூடி அணிந்து செல்லும் நபர்

  இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை கடந்துள்ளது. 

  தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 10 லட்சத்து 64 ஆயிரத்து 194 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 28 ஆயிரத்து 429 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 390 பேர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.
  Next Story
  ×