search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை காட்டும் வரைபடம்
    X
    இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை காட்டும் வரைபடம்

    இன்று 350: பிரிட்டனில் இந்த மாதத்தில் முதன்முறையாக குறைந்த பலி எண்ணிக்கை

    இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து நாடுகளில் இன்று கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350 ஆக பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கியது. கடந்த ஒரு மாத காலமாக உயிர் பலி அதிகமாக இருந்த நிலையில் கடந்த வாரத்தில் இருந்து குறைய ஆரம்பித்தது.

    இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை கொரோனா ஆக்கிரமிக்க தொடங்கியது. பிரிட்டன் லாக்டவுன் மூலம் ஓரளவிற்கு தப்பித்துக் கொண்டது. ஆனால் அமெரிக்கா வசமாக சிக்கிக் கொண்டது.

    இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் நாடுகளை ஒன்றிணைத்து அழைக்கப்படும் யுனைடெட் கிங்டத்தில் கடந்த மாதம் மார்ச் 30-ந்தேதி 180 பேர் உயிரிழந்தனர்.

    அதன்பின் இந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து பலியானோரின் எண்ணிக்கை மளமளவென உயர ஆரம்பித்தது. தினந்தோறும் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது. ஏப்ரல் 7-ந்தேதியில் இருந்து 750 மேற்பட்டோர் தினந்தோறும் பலியாகினர்.

    ஏப்ரல் 19 மற்றும் 20-ந்தேதிகளில் பலி எண்ணிக்கை 500-க்கு கீழ் குறைந்தது. அதன்பிறகு சற்றென உயர்ந்தது. இந்நிலையில் நேற்று 413 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று 350-ஆக குறைந்துள்ளது. இங்கிலாந்தில் 329 பேரும், ஸ்காட்லாந்தில் 13 பேரும், வேல்ஸில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். வடக்கு அயர்லாந்தில் உயிர்ப்பலி இல்லை.

    இதனால் பிரிட்டன் கூடிய விரைவில் கொரோனாவில் இருந்த விடுபட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.
    Next Story
    ×