என் மலர்

  செய்திகள்

  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்
  X
  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்

  கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா, சீனா மோதல் - ‘ஜி-20’ காணொலி காட்சி வழி மாநாடு ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் கொரோனா விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வருவதால் ‘ஜி-20’ காணொலி காட்சி வழி மாநாடு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  ஹாங்காங்:

  கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அந்த அமைப்புக்கான நிதி உதவியையும் நிறுத்தியது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

  இந்தநிலையில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட ஜி-20 நாடுகளின் தலைவர்களின் காணொலி காட்சி வழி மாநாட்டுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

  இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பையும், சீன அதிபர் ஜின்பிங்கையும் இதில் கலந்து கொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் கொரோனா விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வருவதால் இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டு விட்டது.

  இதை ஹாங்காங்கில் இருந்து வெளிவருகிற சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது. 
  Next Story
  ×