search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூப்பர் மார்க்கெட்
    X
    சூப்பர் மார்க்கெட்

    சூப்பர் மார்க்கெட் கடைகளுக்கு ஆண்கள்தான் செல்ல வேண்டும்: ஜப்பான் மேயர் இப்படி சொல்லக் காரணம்?...

    ஜப்பானில் அவசரநிலை கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் ஒசாகா மேயர் ஆண்கள் மட்டுமே பொருட்கள் வாங்க வெளியில் செல்ல வேண்டும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    சீனாவை அடுத்து ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கொரோனா மையம் கொண்டிருந்தபோது, டோக்கியோ ஒலிம்பிக் தொடரை நடத்த ஜப்பான் தீவிரம் காட்டி வந்தது. தங்களது நாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஒலிம்பி்க் தொடருக்கு அனுப்ப மாட்டோம் என கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தெரிவித்தன.

    இதனால் வழியின்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்காக ஜப்பான் மக்கள் திரண்டனர். ஒத்தி வைத்த பிறகு கொரோனாவின் பார்வை ஜாப்பான் பக்கமும் திரும்பியுள்ளது. இதனால் நாடு தழுவிய அவசரநிலை கடைபிடிக்கப்பட்டுள்ளது. மே முதல் வாரம் வரை அவசரநிலை தொடர இருக்கிறது.

    ஜப்பானுக்கு அடுத்தப்படியாக ஒசாகாவில் 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக பரவலை தடுக்க இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பெண்கள் கடைக்குச் சென்றால் பொருட்களை வாங்க நீண்ட நேரம் ஆகும். இதனால் ஆண்கள் மட்டுமே கடைக்குச் செல்ல வேண்டும் என ஒசாகா மேயர் இச்சோரி மட்சுய் தெரிவித்துள்ளார். மேலும், திருமணம் முடிந்தவர்கள் ஜோடியாக கடைக்குச் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இது விமசர்னத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒசாகா மேயர் இச்சோரி மட்சுய் இதுகுறித்து கூறுகையில் ‘‘பெண்கள் கடைக்குச் சென்றால் அவர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஆண்கள் சென்றால், இந்த பொருட்கள் வேண்டும் என்பார்கள். இருக்கும் இடத்தை காட்டினால், நேராக சென்று வாங்குவீர்கள். அதன்பின் வீடு திரும்பி விடுவீர்கள். இதனால் தொடர்பை தவிர்க்க ஆண்கள் கடைக்குச் செல்வது சிறந்தது.

    இதற்கு கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது. ‘‘ஜப்பான் போன்ற நாட்டில் இதுபோன்ற ஒரு வார்த்தை மேயரிடம் இருந்து வருவது வருந்தத்தக்கது’’ என்று ஒருவர் தெரிவித்தார்.

    மேயரின் கருத்தைப் பார்த்தால் ‘‘பெற்றோர்கள், வீட்டு வேலை செய்பர்கள், மருத்துவ உதவி செய்பவர்கள் பற்றி அவர்கள் போதுமான அளவிற்கு சிந்திக்கவில்லை’’ என மற்றொருவரு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    Next Story
    ×