search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை பெறும் நோயாளி
    X
    சிகிச்சை பெறும் நோயாளி

    கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது - திணறும் அமெரிக்கா

    அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது அந்நாட்டினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    நியூயார்க்:

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
     
    தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 8 லட்சத்து 86 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது.
    வைரஸ் பரவியவர்களில் இதுவரை 85 ஆயிரத்து 922 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 50 ஆயிரத்து 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கொரோனாவுக்கு அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
    Next Story
    ×