என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது.
  ஜெனீவா:

  சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

  தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

  இதற்கிடையே, தற்போதையை நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.  6 லட்சத்துக்கு 58 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

  இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது.

  இதுவரை 57  ஆயிரத்துக்கு 600க்கு மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
  Next Story
  ×