என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது
Byமாலை மலர்21 April 2020 8:28 AM GMT (Updated: 21 April 2020 8:28 AM GMT)
கராச்சியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அல்-கொய்தா பயங்கரவாதிகள் 4 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் அல்-கொய்தா பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் கோர்ட்டு, போலீஸ் பயிற்சி நிலையம் உள்ளிட்டவற்றில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கராச்சி நகர் முழுவதும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. இதில், கராச்சியில் உள்ள பழமையான வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்று போலீசார், அந்த வீட்டை சுற்றிவளைத்து துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகளை கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 4 பயங்கரவாதிகளையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×