search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஒரு லட்சத்து 69 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை - கொரோனா அப்டேட்ஸ்...

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்தை நெருங்கியது.
    ஜெனிவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

    கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

    இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    கோப்பு படம்

    தற்போதைய நிலவரப்படி, 24 லட்சத்து 60 ஆயிரத்து 851 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 16 லட்சத்து 47 ஆயிரத்து 820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 392 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 938 பேர் பலியாகியுள்ளனர்.

    கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகளின் விவரங்கள்:-

    அமெரிக்கா - 41,397 
    ஸ்பெயின் - 20,852
    இத்தாலி - 24,114
    பிரான்ஸ் - 20,265
    ஜெர்மனி - 4,706
    இங்கிலாந்து - 16,509
    துருக்கி - 2,140
    ஈரான் - 5,209
    சீனா - 4,632
    பெல்ஜியம் - 5,828
    பிரேசில் - 2,507
    கனடா - 1,680
    நெதர்லாந்து - 3,751
    சுவிஸ்சர்லாந்து - 1,429
    ஸ்வீடன் - 1,580
    Next Story
    ×