search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப்
    X
    அமெரிக்க அதிபர் டிரம்ப்

    நிதியை குறைக்கும் நேரம் இது அல்ல - அமெரிக்காவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்

    உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ள நிலையில் இது நிதியை குறைக்கும் நேரம் அல்ல என ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
    ஜெனிவா:

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 20 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அமெரிக்காவில்  கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

    இதற்கிடையில், வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட போது அது குறித்த தகவல்களை சீனா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காததால் தான் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டி வந்தார். மேலும், வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். 

    அன்ட்டோனியோ மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்

    இதையடுத்து, உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த நிதியை நிறுத்துவதாக நேற்று டிரம்ப் அறிவித்தார். இதனால், உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கும் பல மில்லியன் டாலர்கள் நிதி தடைபட்டுள்ளது.

    இந்நிலையில், உலக சுகாதார அமைப்புக்கு கொடுக்கப்படும் நிதியை நிறுத்தும் நேரம் இது அல்ல அமெரிக்காவுக்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் வேண்டுகொள் விடுத்துள்ளார். 

    இது குறித்து அவர் கூறுகையில், ''உலக சுகாதார அமைப்பு மட்டுமல்லாமல் கொரோனாவுக்கு எதிராக போராடும் அனைத்து மனிதாபிமான அமைப்புகளுக்கும் கிடைக்கும் நிதியை குறைக்கும் நேரம் இது அல்ல. நான் முன்பே கூறியது போல், இது சர்வதேச சமூகம் ஒன்றாக இணைந்து வைரஸ் பரவுவது மட்டுமல்லாமல் வைரசால் ஏற்படும் விளைவுகளையும் தடுக்கும் நேரமாகும் ’’ என்றார்.
    Next Story
    ×