search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக்கின் நவீன கட்டிடக் கலை தந்தை ரிபாத் சதீர்ஜி
    X
    ஈராக்கின் நவீன கட்டிடக் கலை தந்தை ரிபாத் சதீர்ஜி

    ஈராக்கின் கட்டிடக்கலை தந்தை கொரோனா வைரசுக்கு பலி

    ஈராக்கில் மிகவும் பிரபலமான பெருமைக்குரிய கட்டிடக்கலை தந்தை ரிபாத் சதீர்ஜி கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளார்.
    ஈராக்:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இதற்கிடையே, இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    ஈராக்கில் கொரோனாவுக்கு இதுவரை 72 பேர் பலியாகி இருக்கிறார்கள். 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈராக்கின் நவீன கட்டிடக் கலை தந்தை என்று அழைக்கப்படும் ரிபாத் சதீர்ஜி கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளார்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். 93 வயதான ரிபாத் சதீர்ஜி ஈராக்கில் மிகவும் பிரபலமான சில கட்டமைப்புகளை வடிவமைத்து கொடுத்த பெருமைக்குரியவர். இதனால் பாக்தாத்தின் சஹ்ரிர் சதுக்கத்தின் போராட்டக்கள மையமான சுதந்திர நினைவு சின்னத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    Next Story
    ×