search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி (கோப்புப் படம்)
    X
    பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி (கோப்புப் படம்)

    ஹைட்ராக்சி குளோரோகுயின் மூலப்பொருள் ஏற்றுமதிக்கு அனுமதி - மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி

    ஹைட்ராக்சி குளோரோகுயின் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்து சரியான நேரத்தில் உதவிசெய்த பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ நன்றி தெரிவித்தார்.
    பிரேசிலியா:

    சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து, பல்வேறு நாடுகள் கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

    இதற்கிடையே, ராமாயணத்தில் உள்ள சஞ்சீவி மூலிகைபோல், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி உதவ வேண்டும் என பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ கடிதம் எழுதியிருந்தார்.

    அதில், அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவந்து லட்சுமணன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும். ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பிரேசிலுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, மருந்துக்கான மூலப்பொருட்களை அனுப்ப மோடி அனுமதி தந்தார்.

    இந்நிலையில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்து சரியான நேரத்தில் உதவிசெய்த பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ நன்றி தெரிவித்தார்.

    பிரேசில் நாட்டு மக்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உரையாற்றியனார். 

    அப்போது அவர் கூறுகையில், இந்தியப் பிரதமருடனான நேரடி உரையாடலின் விளைவாக ஹைட்ராக்சி குளோரோகுயின் உற்பத்தியைத் தொடர்வதற்கான மூலப்பொருட்களைப் பெற உள்ளோம். இதன்மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். சரியான நேரத்தில் உதவிய பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி கூறுகிறேன் என தெரிவித்தார்.

    ஏற்கனவே, ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்ததற்கு இந்தியாவிற்கு நன்றி என அமெரிக்க அதிபர்  டிரம்ப் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×