search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்திய காட்சி
    X
    கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்திய காட்சி

    கொரோனா வைரசுக்கு சீனாவில் 95 போலீஸ் அதிகாரிகள் பலி - 46 மருத்துவ பணியாளர்களும் பலி

    கொரோனாவுக்கு எதிரான போரில் 95 போலீஸ் அதிகாரிகளும், 46 மருத்துவ பணியாளர்களும் உயிரைத் தியாகம் செய்துள்ளதாக சீனா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    பீஜிங்:

    சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி வுகான் நகரில் தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அது நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியது.

    சீன நாட்டில் இதுவரை மொத்தம் 81 ஆயிரத்து 639 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இந்த வைரஸ் தாக்கியதில் அங்கு 3,326 பேர் உயிரிழந்தனர் என அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

    கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி

    இருப்பினும், சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு முன்னிலையில் இருந்து சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பரவி ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி சீன அரசு வெளிப் படையாக எந்த தகவலும் வெளியிடவில்லை. 3 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மட்டும் கூறி இருந்தது.

    இந்த நிலையில், சீனாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிற நிகழ்ச்சி, பீஜிங்கில் நேற்று (சனிக்கிழமை) நடந்தது.

    இந்த நிகழ்ச்சியின்போது, நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக நடந்த போரில் 95 போலீஸ் அதிகாரிகளும், 46 மருத்துவ பணியாளர்களும் தங்களது உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள் என்று அரசு சார்பில் முதன் முதலாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த தகவல்களை பீஜிங்கில் இருந்து வெளியாகிற சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்’ நாளேடு வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×