search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கொரோனா பாதிப்பு- அமெரிக்கா 74 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும்

    அமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. 74 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்க நாட்டில் தான் தற்போது கொரோனா தாக்குதல் உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு 2 லட்சத்து 77 ஆயிரம் பேரை தாக்கி இருக்கிறது. இதுவரை 7406 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1480 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    கொரோனா நோய் தாக்குதலால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்திக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான ‘மார்க்கன் ஸ்டான்லி’ என்ற அமைப்பு கூறியுள்ளது. அதாவது 1946-ம் ஆண்டு பொருளாதார நிலை எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. அதாவது 74 ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு அமெரிக்கா சென்றுவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

    தற்போதைய காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக சரியலாம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் அடுத்த ஜூன் மாத காலாண்டில் 38 சதவீதம் சரியலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஒட்டுமொத்தமாக 2020-ம் ஆண்டில் 5.5 சதவீதம் பொருளாதார சரிவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். உலகின் முன்னணி பொருளாதார நாடாக இருந்த அமெரிக்கா கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

    Next Story
    ×