search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவால் உயிரிழந்த நபரை அடக்கம் செய்யும் காட்சி
    X
    கொரோனாவால் உயிரிழந்த நபரை அடக்கம் செய்யும் காட்சி

    64 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை - கொரோனா அப்டேட்ஸ்

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
    ஜெனிவா:

    சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

    தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

    தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 11 லட்சத்து 82 ஆயிரத்து 825 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    வைரஸ் பரவியவர்களில் 8 லட்சத்து 74 ஆயிரத்து 793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 41 ஆயிரத்து 965 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

    வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 63 ஆயிரத்து 924 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 108 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

    அமெரிக்கா - 8,173
    இத்தாலி - 15,362
    ஸ்பெயின் - 11,744
    ஜெர்மனி - 1,330
    சீனா - 3,326
    பிரான்ஸ் - 7,560
    ஈரான் - 3,452
    இங்கிலாந்து - 4,313
    சுவிஸ்சர்லாந்து - 641
    துருக்கி - 501
    பெல்ஜியம் - 1,283
    நெதர்லாந்து - 1,651
    கனடா- 228
    ஆஸ்திரியா - 186
    தென்கொரியா - 177
    போர்ச்சீகல் - 266
    பிரேசில் - 376
    ஸ்வீடன் - 373
    டென்மார்க் - 161
    ஈக்வடார் - 172
    ரூமெனியா - 146
    பிலிப்பைன்ஸ் - 144
    இந்தோனேசியா - 191  
    அல்ஜீரியா - 130
    Next Story
    ×