search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி டிரம்ப்
    X
    ஜனாதிபதி டிரம்ப்

    கச்சா எண்ணெய் உற்பத்தி விவகாரம் : ரஷியா, சவுதி அரேபியா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணையும் - டிரம்ப் உறுதி

    கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷியாவும், சவுதி அரேபியாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தகுந்த நேரத்தில் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணையும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவையை காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்துள்ளது.

    எனவே இதனை சரி செய்யும் விதமாக, சவுதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து கொள்வது குறித்து ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.

    ஆனால் உற்பத்தியை குறைப்பதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதனால் ஒபெக் ஒப்பந்தத்தை ரஷியா நிராகரித்தது. இந்த விவகாரத்தில் சவுதி அரேபியா மற்றும் ரஷியா இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

    இந்த நிலையில் கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷியாவும், சவுதி அரேபியாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தகுந்த நேரத்தில் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணையும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து டிரம்ப் கூறுகையில், “அவர்கள் ஒன்று சேரப் போகிறார்கள், நாங்கள் அனைவரும் ஒன்றிணைய போகிறோம். மக்களின் நன்மைக்காக நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க 

    போகிறோம்” என கூறினார்.
    Next Story
    ×