என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இத்தாலியை விரட்டும் கொரோனா - ஒரே நாளில் 837 பேர் பலி
Byமாலை மலர்1 April 2020 12:56 AM IST (Updated: 1 April 2020 12:56 AM IST)
இத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 837 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரோம்:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 202 நாடுகளுக்கு பரவியுள்ளது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 544 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான இத்தாலி தான் கொரோனாவுக்கு உலக அளவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 792 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில், இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 837 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.
Next Story
×