search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர்
    X
    ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர்

    ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதல்களில் 18 பாதுகாப்பு படையினர் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. 

    இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

    உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலிபான்களுக்கும் அமெரிக்க படைகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டாலும் ஆப்கானிஸ்தான் அரசின் படையினர் மீதான தாக்குதல் தொடரும் என தலிபான்கள் தெரிவித்திருந்தனர். 

    இந்நிலையில், அந்நாட்டின் தஹார் மாகாணம் குவாஜா ஹர் மாவட்டத்தில் உள்ள தலைமை போலீஸ் அதிகாரியின் வீட்டில் நேற்று  தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 

    இந்த தாக்குதலில் 12 போலீசார், பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 போலீசார் காயமடைந்தனர்.

    அதேபோல், சபுல் மாகாணத்தின் அர்ஹண்டப் மாவட்டத்தில் உள்ள ராணுவ சோதனைச்சாவடி மீது தலிபான்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதனால், ஆப்கானிஸ்தானில் நேற்று ஒரே நாளில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய இரு வேறுத்தாக்குதலில்களில் மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர்.
    Next Story
    ×