search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்தோரை கொண்டு செல்லும் ராணுவ வாகனங்கள்
    X
    உயிரிழந்தோரை கொண்டு செல்லும் ராணுவ வாகனங்கள்

    ஒரே நாள்: ஸ்பெயினில் 674 பேர், பிரான்சில் 319 பேர், அமெரிக்காவில் 247 பேர் - கொரோனா அப்டேட்ஸ்

    கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஸ்பெயினில் 674 பேர், பிரான்சில் 319 பேர், அமெரிக்காவில் 247 பேர் உயிரிழந்தனர்.
    வாஷிங்டன்:

    சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

    உலகம் முழுவதும் இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரத்து 929 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 30 ஆயிரத்து 299 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா புரட்டி எடுத்துவருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. தற்போது அமெரிக்காவும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.

    இத்தாலியில் நேற்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு 889 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரசுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

    ஸ்பெயினிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 674 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது.

    இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 319 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இதனால் பிரான்சில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது.

    அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் வைரசுக்கு 247 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 943 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

    அமெரிக்கா - 1,943 
    இத்தாலி - 10,023
    சீனா - 3,295
    ஸ்பெயின் - 5,812
    ஜெர்மனி - 403
    பிரான்ஸ் - 2,314
    ஈரான் - 2,517
    இங்கிலாந்து - 1,019
    சுவிஸ்சர்லாந்து - 242
    நெதர்லாந்து - 639
    தென்கொரியா - 144
    பெல்ஜியம் - 353
    ஆஸ்திரியா - 68
    துருக்கி - 108
    கனடா - 55
    பொர்ச்சீகல் - 100
    பிரேசில் - 93
    ஸ்வீடன் - 105
    டென்மார்க் - 65
    ஈக்வடார் - 48
    ஜப்பான் - 49
    இந்தோனேசியா - 102
    பிலிப்பைன்ஸ் - 68
    ஈராக் - 42

    Next Story
    ×