search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    எகிப்து: 14 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 18 பேர் பலி

    எகிப்தில் சங்கிலி தொடர் போல் நிகழ்ந்த கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    கெய்ரோ :

    உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் எகிப்திலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 500 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, தலைநகர் பாக்தாத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ், கார், லாரி உள்ளிட்டவை அணிவகுத்து நின்றன. ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு பெற போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவுக்காக அந்த வாகனங்கள் காத்திருந்தன.

    அப்போது, லாரி ஒன்று திடீரென முன்னால் நின்று கொண்டிருந்த கார்கள் மீது மோதியது. இதில் 14 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் கார்கள் அப்பளம் போல் நொறுங்கின. இந்த கோர விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    Next Story
    ×