search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தரிப்பு படம்
    X
    சித்தரிப்பு படம்

    கொரோனா பீதி: அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் பாகிஸ்தான் தடை

    பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600-ஐ கடந்து, மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் 14 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, பலியானவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது.

    சீனாவின் நட்புநாடான பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்து, மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் அனைத்து வெளிநாட்டு பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் இன்றிரவு 8 மணியில் இருந்து அடுத்த இருவாரங்கள் வரை தங்கள் நாட்டு எல்லைக்குள் தரையிறங்க  தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

    மேலும், கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுப்பதற்கும் பரிசோதனைகளுக்கான உபகரணங்களை வாங்குவதற்காகவும் உலக வங்கி அளித்த கடனில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தொகையில் சுமார் 4 கோடி அமெரிக்க டாலர்களை செலவிடுவதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தீர்மானித்துள்ளார்.

    Next Story
    ×