search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் போல்சனரோ
    X
    அதிபர் போல்சனரோ

    பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும்: அதிபர் போல்சனரோ

    கொரோனா வைரசின் உச்சக்கட்ட தாக்குதல் 3 அல்லது 4 மாதங்களில் முடிவுக்கு வரும் என்றும் இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்பும்’ என்றும் அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.
    மாஸ்கோ :

    கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து மீண்டுவர முடியாமல் தவித்து வருகின்றன. அந்தவகையில் பிரேசில் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் ஆகும் என அந்த நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றும்போது அவர் கூறுகையில், ‘கொரோனா வைரசின் உச்சக்கட்ட தாக்குதல் 3 அல்லது 4 மாதங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இதனால் 6 அல்லது 7 மாதங்களில் பிரேசில் இயல்பு நிலைக்கு திரும்பும்’ என்று கூறினார்.

    பிரேசிலில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆகவும், தாக்குதலுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 428 ஆகவும் உள்ளது. 
    Next Story
    ×