search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீட்டர் டட்டன்
    X
    பீட்டர் டட்டன்

    ஆஸ்திரேலியா உள்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

    ஆஸ்திரேலியா நாட்டின் உள்துறை மந்திரி பீட்டர் டட்டன், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக இன்று தெரிவித்துள்ளார்.
    சிட்னி:

    உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஈரான் உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மந்திரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளனர்.

    ஐரோப்பிய நாடுகளையும் மிரட்டிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆஸ்திரேலியா நாட்டில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்காக சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மூன்றுபேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உள்துறை மந்திரிகள் ஆலோசனை கூட்டம் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் கடந்த வாரம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆஸ்திரேலியா திரும்பிய அந்நாட்டின் உள்துறை மந்திரி பீட்டர் டட்டன், மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் கடந்த வாரம் சிட்னி நகரில் உள்ள அரசு மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கண்காணிப்பு மற்றும் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதாக இன்று காலை அவர் தெரிவித்துள்ளார்.

    எனினும், நான் நலமாக இருப்பதாகவே உணர்கிறேன். இந்த வைரஸ் தொற்று என்னுடன் முடிந்து விட்டதா? அல்லது, நமது நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் இதர பாராளுமன்ற உறுப்பினர்களையும் தாக்கியுள்ளதா? என்பது தெரியவில்லை எனவும் பீட்டர் டட்டன் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

    Next Story
    ×