search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் தனது மனைவி ரீட்டா வில்சனுடன்
    X
    ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் தனது மனைவி ரீட்டா வில்சனுடன்

    ஹாலிவுட் தம்பதிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

    ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் தனக்கும், தனது மனைவியும் நடிகையுமான ரீட்டா வில்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    சிட்னி:

    சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அங்கு தனது வீரியத்தை குறைத்துக்கொண்டுள்ள அதேவேளையில் மற்றநாடுகளில் தனது கோரப்பிடியை இறுக்கி வருகிறது. இந்த கொடிய வைரசால் பல நாடுகளில் மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் தனக்கும், தனது மனைவியும் நடிகையுமான ரீட்டா வில்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 63 வயதாகிறது.

    அமெரிக்காவை சேர்ந்த டாம் ஹாங்ஸ் தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மனைவி ரீட்டாவுடன் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்துக்கு சென்றிருந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இது குறித்து டாம் ஹாங்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தனக்கும், வில்சனுக்கும் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், மருத்துவரின் உதவியை நாடியதாகவும், அதில் தங்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் தாங்கள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், நோய் தொற்று குறித்து தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரியப்படுத்துவதாகவும் டாம் ஹாங்ஸ் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு தாக்கிய முதல் ஹாலிவுட் பிரபலமாக டாம் ஹாங்ஸ் அறியப்படுகிறார்.

    இதனிடையே படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த டாம் ஹாங்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த திரைப்படத்தில் வேலை பார்த்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
    Next Story
    ×