search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப் மற்றும் புதின்
    X
    டொனால்டு டிரம்ப் மற்றும் புதின்

    இட்லிப்பிற்கு எங்கள் படைகளை அனுப்பமாட்டோம் - பின்வாங்கிய அமெரிக்கா

    சிரியாவின் இட்லிப் மாகாணத்திற்கு தங்கள் நாட்டு தரைப்படைகளை அனுப்பும் எண்ணம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 

    கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்  தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது.
     
    சிரியா மற்றும் துருக்கி என இரு நாடுகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 50-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சண்டையில் சிரிய படைகளுக்கு ஆதரவு அளிக்கும் ரஷியா, கிளர்ச்சியாளர்களையும் துருக்கி படைகளையும் குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தியது.   

    இட்லிப் மாகாணத்தில் நடைபெற்ற சண்டையை நிறுத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் ஒப்பந்தம் செய்துகொண்டனர். இதனால் கடந்த சில நாட்களாக இட்லிப் பகுதியில் எந்தவித தாக்குதல்களும் அரங்கேறவில்லை. 

    சிரியாவில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள் (கோப்பு படம்)

    இதற்கிடையில், சிரியா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தங்களுக்கு ராணுவ உதவிகள் செய்யவேண்டும் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை நேட்டோ படைகள் நிராகரித்தன. ஆனால், அமெரிக்க படைகள் துருக்கிக்கு உதவியாக இட்லிப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், சிரியாவின் இட்லிப் மாகாணத்திற்கு தங்கள் நாட்டு தரைப்படைகளை அனுப்பமாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

    அதிதீவிர நடவடிக்கைகள் தேவைப்பட்டாலே தவிர எக்காரணம் கொண்டும் அமெரிக்க தரைப்படைகள் இட்லிப்பிற்கு அனுப்பப்படமாட்டார்கள் என சிரிய விவகாரத்துக்கான அமெரிக்க சிறப்பு அதிகாரி ஜேம்ஸ் ஜெப்பர் தெரிவித்துள்ளார்.

    குர்திஷ்களின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் இட்லிப் உள்பட வடக்கு பகுதியில் இருந்த கடந்த ஆண்டு அமெரிக்க தரைப்படைகள் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×