search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை
    X
    சிறைகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

    கொரோனா வைரஸ் பீதி - ஈரானில் 70 ஆயிரம் கைதிகள் விடுதலை

    சிறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக 70 ஆயிரம் கைதிகளை ஈரான் அரசு தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது.
    பீஜிங்:

    சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்கு இந்த கொடிய வைரசால் இதுவரை 237 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அதை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அங்குள்ள சிறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக 70 ஆயிரம் கைதிகளை ஈரான் அரசு தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது.

    இது குறித்து அந்த நாட்டின் நீதித்துறை தலைவர் இப்ராகிம் ரைசி கூறுகையில், ’கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகமாக இருப்பதால் சிறையில் இருக்கும் கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை தற்காலிகமாக விடுவித்துள்ளோம். அதே சமயம் கைதிகளை விடுவிப்பதால் நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தும்‘ என கூறினார்.

    அதே சமயம் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிகள் எப்போது மீண்டும் சிறைக்கு திரும்புவார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
    Next Story
    ×